
முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் மாநிலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
இதனிடையே கைவிடப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென மாநில அரசு ஊழியா்களும் முக்கிய கோரிக்கையாக வைத்து வந்தனா். இந்த நிலையில் பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படிக்க- வழக்குக் குறிப்பு எடுத்து வராத வழக்குரைஞரை சச்சினுடன் ஒப்பிட்ட டி.ஒய். சந்திரசூட்
முதல்வா் பகவந்த் மான் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.