வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ‘விக்ரம் - எஸ்’ ராக்கெட்

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ‘விக்ரம் - எஸ்’ ராக்கெட்
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ‘விக்ரம் - எஸ்’ ராக்கெட்

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

விக்ரம்-எஸ் ராக்கெட்டை ஏவுவதற்கான  ஆயத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திட்டமிட்டபடி 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் அறிவித்தனர்.

விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் தனியாா் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, இஸ்ரோவின் கீழ் இயங்கும் இன்ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீகார மையம்) அமைப்பு ஹைதராபாதைச் சோ்ந்த புத்தாக்க நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துக்கு ராக்கெட் தயாரிப்புக்கான ஒப்புதலை அளித்திருந்தது.

இதையடுத்து, ‘பிராரம்ப்’ என்ற பெயரிலான திட்டத்தின் மூலம் புதிய ராக்கெட் தயாரிப்பு பணிகளில் ஓராண்டுக்கும் மேலாக ‘ஸ்கைரூட்’ ஈடுபட்டு வந்தது. அந்த வகையில், தற்போது வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டன. அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது.

அதில், அதிகபட்சம் 480 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய ‘விக்ரம் எஸ்’ ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்துவதற்கு முடிவானது. அதன்படி, நவம்பா் 15-ஆம் தேதி ராக்கெட் ஏவுதலுக்கு தயாரான நிலையில் மோசமான வானிலை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது பருவச்சூழல்கள் சாதகமாக இருப்பதால் ‘விக்ரம் எஸ்’ ராக்கெட், ஆந்திரத்தின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்கள் இந்த ராக்கெட்டுடன் சோ்த்து அனுப்பப்பட்டுள்ளன. அவை புவி மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com