ஆம் ஆத்மிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய முக்கிய கட்சி!

அடுத்த மாதம் நிகழவுள்ள குஜராத் பேரவைத் தேர்தல் மற்றும் தில்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் புதிய பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. 
ஆம் ஆத்மிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய முக்கிய கட்சி!

புது தில்லி: அடுத்த மாதம் நிகழவுள்ள குஜராத் பேரவைத் தேர்தல் மற்றும் தில்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் புதிய பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. 

தில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காக ஆத் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை பாஜக கட்சி சாடியுள்ளது. 

பாஜக மற்றும் தில்லி பாஜகவின் அதிகாரப்பூர்வ சுட்டுரை பக்கத்தில் வெளியிடப்பட்ட விடியோக்களில் யாம்ராஜ் சந்திரகுப்துடன் இரு மாநிலங்களைப் பற்றி உரையாடுவதைக் காணலாம். வாய்ப்பு தேடிய மனிதன் மக்களுக்கு எப்படி துரோகம் செய்கிறான் என்பதை சதிரகுப்த் விவரிக்கிறார். இதுதொடர்பாக 2 விடியோக்களை வெளியிட்டுள்ளது. 

மேலும் ஒரு விடியோவில் கேஜரிவால் போதையில்லா பஞ்சாப் என்று உறுதியளித்தார். ஆனால் தோல்வியடைந்தார் என்பது பற்றியும், யமுனை நதியை சுத்தம் செய்யத் தவறியது பற்றியும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த விடியோக்களுக்கும் பதிலளித்த அமைச்சர் மீனாட்சி லேகி, தில்லியில் ஒரு வருடத்தில் 54 ஆயிரம் பேர் மாசுபட்ட காற்றைச் சுவாசித்ததால் இறந்தனர். இன்று மன்னிப்பு கேட்கிறது ஆம் ஆத்மி, வாய்ப்பு கொடுத்தவர் ஏமாற்றிவிட்டார் என்றார். 

கேஜரிவாலுக்கு யார் வாய்ப்பு கொடுத்தாலும், பதிலுக்கு அவர் ஏமாற்றிவிட்டுவார் என்று தில்லி பாஜக எம்பி பர்வேஷ் வர்மா தெரிவித்தார். 

250 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தில்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 7-ம் தேதி முடிவு அறிவிக்கப்படுகிறது. 

குஜராத் பேரவைத் தேர்தல் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும், அதே நேரத்தில் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com