தெலங்கானா அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

தெலங்கானாவின் தொழிலாளர் துறை அமைச்சர் மல்லா ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 
தெலங்கானா அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!
Published on
Updated on
1 min read

தெலங்கானாவின் தொழிலாளர் துறை அமைச்சர் மல்லா ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

ஐதராபாத் மற்றும் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டங்களில் உள்ள அமைச்சர், அவரது மகள் மகேந்திர ரெட்டி, மருமகன் மாரி ராஜசேகர் ரெட்டி உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். 

தகவல் தொழில்நுட்பத் துறையின் வரி ஏய்ப்புப் பிரிவைச் சேர்ந்த சுமார் 50 குழுக்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். 

வரிஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, மல்லா ரெட்டி குழுமம் நடத்தும் வருமானப் பதிவேடுகளை சுமார் 150 முதல் 170 அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். 

மல்லா ரெட்டி குழுமம் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.

நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் ஐடி குழுக்கள் சோதனை நடத்தி வருகின்றன. செவ்வாய்க்கிழமை முழுவதும் தேடுதல் பணி தொடரும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com