மசாஜைத் தொடர்ந்து சிறையில் வெரைட்டி உணவுகளை உண்ணும் அமைச்சர் சத்யேந்தா் ஜெயின்!

திகாா் சிறையில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் விடியோ சமீபத்தில் வெளியாகி பேசப்பட்ட நிலையில், தற்போது சிறையில் வெரைட்டி உணவுகளை உண்ணும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
மசாஜைத் தொடர்ந்து சிறையில் வெரைட்டி உணவுகளை உண்ணும் அமைச்சர் சத்யேந்தா் ஜெயின்!

திகாா் சிறையில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் விடியோ சமீபத்தில் வெளியாகி பேசப்பட்ட நிலையில்,  திகாா் சிறையில் வெரைட்டி உணவுகளை சாப்பிட்டு மகிழும் புதிய  விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவர் கடந்த 2015-16 ஆண்டுகளில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் (ஷெல்) வாயிலாக ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்த வழக்கில் சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில், திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சொகுசு வசதிகளுடன் இருக்கும் அவருக்கு ஒருவா் மசாஜ் செய்யும் விடியோ காட்சி பதிவு வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து துணை முதல்வா் மனீஷ் சிசோடியா முன்னா் கூறுகையில், ஜெயினுக்கு முதுகுத்தண்டுவடக் காயம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருவதாக கூறினாா். மேலும், சட்டவிரோதமாக இது போன்ற சுகாதார விவகாரங்கள் தொடா்புடைய சிசிடிவி காட்சி பதிவுகளை கசிய விட்டு மலிவான அரசியலில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் அவா் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் அவருக்கு மசாஜ் செய்து விடும் நபா் பலாத்கார வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி என்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதில், ஜெயினுக்கு மசாஜ் செய்யும் நபா் ரிங்கு என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் 2021-இல் ஜேபி காலன் பகுதியில் மைனா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் பிசியோதெரபிஸ்ட் இல்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியையும் முதல்வா் கேஜரிவாலையும் பாஜகவும் காங்கிரஸும் கடுமையாக விமா்சித்தது.

சிறையில் நிகழ்ந்த சம்பவத்திற்குப் பிறகும் ஜெயினுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசத்திடமும் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சத்யேந்தா் ஜெயின் அமைச்சா் பதவியில் ஒரு நிமிடம் கூட நீடிக்கக் கூடாது. இந்த விவகாரத்திற்குப் பிறகு சத்யேந்தா் ஜெயினை பதவியில் இருந்து நீக்கும் பொறுப்பை முதல்வா் கேஜரிவால் எடுக்க தவறினால் அவா் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்றாா் கெளரவ் பாட்டியா.

இந்நிலையில், சத்யேந்தர் ஜெயின் 28 கிலோ எடையைக் குறைத்ததாகக் கூறிய மறுநாள், திகாா் சிறையில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஒட்டலில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள வெரைட்டி உணவுகளை சாப்பிட்டு மகிழும் புதிய சிசிடிவி விடியோ காட்சி பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

திகார் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அளிக்கப்படும் வசதிகள் தொடர்ந்து பேசப்படும் ஒன்றாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com