வெல்கம் ஆஃபர்: ஜியோ 5ஜி சேவையை இலவசமாகப் பெறுவது எப்படி?

ஐந்தாவது தலைமுறை தகவல் தொடா்பு தொழில்நுட்பமாக 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்தது.
வெல்கம் ஆஃபர்: ஜியோ 5ஜி சேவையை இலவசமாகப் பெறுவது எப்படி?

ஐந்தாவது தலைமுறை தகவல் தொடா்பு தொழில்நுட்பமாக 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்தது.

முகேஷ் அம்பானி தலைமையில் தொலைத்தொடர்புத் துறையில் கோலோச்சி வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தற்போது நாட்டில் உள்ள எட்டு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்திருக்கிறது.

தற்போது, தில்லி என்சிஆர், சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், வாராணசி, நத்வாடா ஆகிய எட்டு நகரங்களிலும் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும்.

இதுவரை 5ஜி சேவையில் எந்த கட்டண அமைப்பும் உருவாக்கப்படவில்லை. அதேவேளையில் பீட்டா எனப்படும் பரிசோதனை நிலையிலேயே இருக்கும் 5ஜி சேவையை இலவசமாகப் பெற ஜியோ நிறுவனமே சில வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

5ஜி சேவையைப் பெற தகுதிவாய்ந்த பயனாளர்களைத் தேர்வு செய்து, ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃபர் என்ற முறையில் பரிசோதித்து வருகிறது.

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் பற்றி ..
5ஜி சேவை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நகரங்களில் வாழும் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்குத்தான் இந்த ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் அளிக்கப்படுகிறது. இந்த இலவச திட்டத்தின் கீழ், பயனாளர்கள் 5ஜி இணைய சேவையை 1ஜிபிபீஎஸ் வேகத்துக்குப் பயன்படுத்தலாம். ஆனால், 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நகரங்களில் வசிக்கும் அனைவருக்கும் இந்தச் சலுகைக் கிடைக்காது. 

இந்தச் சலுகையின் கீழ் பயன்பெற வாடிக்கையாளர்கள் நிச்சயமாக சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

அதற்காக ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பயனாளர்கள் முன்பதிவு செய்ய வண்டும். ஆனால், இந்த முன்பதிவுக்கே, பயனாளர்களுக்கு சில தகுதிகள் இருந்தால்தான் முன்பதிவு செய்ய முடியும் என்கிறது ஜியோ இணையதளம். 

அதாவது, ஜியோ 5ஜி கம்பாடிபிள் செல்லிடப்பேசியை வைத்திருக்க வேண்டும்.

ஏற்கனவே, ஜியோ நெட்வொர்க் கவரேஜ் இருக்கும் இடத்தில் வசிக்க வேண்டும். 

அதோடு, ஏற்கனவே 239 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்டு அல்லது போஸ்டுபெய்டு திட்டத்தை பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது ஜியோ.

இந்த தகுதிகள் அனைத்தும் இருந்தால், ஜியோ வெல்கம் ஆஃபருக்கு ஒருவர் தகுதிபெற்றவராகிறார்.

ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று,எக்ஸ்பிரஸ் இன்ட்ரெஸ்ட்  என்பதை அழுத்தி, உங்கள் செல்லிடப்பேசி ஜியோ எண்ணை பதிவிடவும். அதற்கு ஓடிபி வரும். அதனை உள்ளிடவும்.
ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று,எக்ஸ்பிரஸ் இன்ட்ரெஸ்ட்  என்பதை அழுத்தி, உங்கள் செல்லிடப்பேசி ஜியோ எண்ணை பதிவிடவும்.

அதற்கு ஓடிபி வரும். அதனை உள்ளிடவும். உங்கள் முன்பதிவு நிறைவு பெறும். இதைத் தொடர்ந்து நீங்கள் தகுதிவாய்ந்த வாடிக்கையாளராக இருந்தால், வெல்கம் ஆஃபர் பெற உங்களுக்கு அழைப்பு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com