2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம்: நாசா 

2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்கள் வாழவும் வேலை செய்யவும் முடியும் என அமெரிக்க ஓரியன் சந்திர விண்கலைத் திட்டத்தின் தலைவர் ஹோவர்ட் ஹூ தெரிவித்துள்ளார். 
ஓரியன் விண்கலம் சந்திரனைச் சுற்றி வரும் ஒரு படம். நாசா
ஓரியன் விண்கலம் சந்திரனைச் சுற்றி வரும் ஒரு படம். நாசா


2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்கள் வாழவும் வேலை செய்யவும் முடியும் என அமெரிக்க ஓரியன் சந்திர விண்கலத் திட்டத்தின் தலைவர் ஹோவர்ட் ஹூ தெரிவித்துள்ளார். 

புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பைக் காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்திருந்தது. இது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் மனிதர்களை மீண்டும் நிலவில் கால் பதிப்பதற்கான முதல் பெரிய படியாகும். அதன்படி, ஆகஸ்ட் மாதமே ஆர்டெமிஸ் ஏவுகணையை விண்ணில் செலுத்த நாசா தயாராகி வந்தது. எனினும் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் நவம்பர் 16 அன்று தனது சக்திவாய்ந்த புதிய ஆர்டெமிஸ் ஏவுகணையை வெற்றிகரமாக நாசா விண்ணில் செலுத்தியது. 

இதுகுறித்து நாசாவுக்கான ஓரியன் விண்கலத் திட்டத்தை வழிநடத்தும்  ஹோவர்ட் ஹு கூறியதாவது: 2030 ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிலவில் வாழவும் வேலை செய்யவும் முடியும். "நாங்கள் மக்களை நிலவுக்கு அனுப்பப் போகிறோம், அவர்கள் அந்த மேற்பரப்பில் வாழ்ந்து அறிவியலைச் செய்யப் போகிறார்கள்" என்று  கூறினார். 

மேலும், அங்கு அவர்களுக்கு தேவையான பணியை செய்யலாம். இது நாசாவுக்கு வரலாற்று நாள். அதுமட்டுமல்ல விண்வெளி ஆராய்ச்சிகளை விரும்பும் அனைவருக்கும் இது சிறந்த நாள். 

அதாவது, நாம் நிலவுக்கு திரும்பிச் செல்கிறோம். அதற்காகவே இந்த நிலையான(ஆர்டெமிஸ்) திட்டத்தை நோக்கி செயல்படுகிறோம். இது மக்களை சுமந்து செல்லும் வாகனமாகும். அது மீண்டும் நிலவில் நம்மைத் தரையிறக்கும் என்றார். 

கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் அமஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார். 

வரும் 2024 ஆம் ஆண்டு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியான் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆளில்லாமல் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.  ஓரியான் விண்கலம் ஏற்கனவே பூமியிலிருந்து 232,683 மைல்கள் பயணித்துள்ளது.

நாசாவின் ஆர்டெமிஸ் பணியானது 50 ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் இயற்கை செயற்கைக்கோளில் முதல் மனிதர்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

ஆர்டெமிஸ் என்பது நாசாவின் முதல் ஒருங்கிணைந்த விண்கலச் சோதனை ஆகும், இது மனிதர்களை அவர்கள் முன்னெப்போதையும் விட அதிக தூரம் அழைத்துச் செல்லும் நோக்கத்திற்காக நாசா உருவாக்கியது.

இந்நிலையில், நிலவுக்கும் மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் திட்டத்தில் நாசா ஆர்வம் காட்டி வருகிறது. 

நிலவின் தென் துருவத்திற்கு அருகே குழுவினர் தரையிறங்க வேண்டும் என்பது தற்போதைய திட்டம், அங்கு அவர்கள் ஒரு வாரம் தண்ணீரின் அறிகுறிகளைத் தேடுவார்கள். விலைமதிப்பற்ற திரவம் கண்டுபிடிக்கப்பட்டால், செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வழியில் ராக்கெட்டுகளை எரிபொருளாக மாற்றுவதற்கு இது பயன்படுத்தப்படலாம்.

சுரங்கம் மற்றும் அறிவியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிரந்தர மனித குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும் என்பதே இதன் பொருள்.

"அமெரிக்கா மட்டுமின்றி உலகத்துக்காகவும் நீண்ட கால திட்டமிட்ட விண்வெளி ஆய்வுக்கு நாங்கள் எடுக்கும் முதல் படி இதுவாகும்" என்று ஹு கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com