
நடைப்பயணத்தில் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும்
காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மூன்றாவது நாளாக தனது கணவருடன் பங்கேற்றார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைத் தாண்டி தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த மாநிலத்தின் காந்த்வா மாவட்டம், மோர்டாக்கா பகுதியில் இருந்து தனது நான்காவது நாள் நடைப்பயணத்தை ராகுல் சனிக்கிழமை காலை தொடங்கினாா்.
இதில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் நடைப்பயணத்தில் பங்கேற்றார். தனது சகோதரா் ராகுலின் இந்த நடைப்பயணத்தில் பிரியங்கா கடந்த வியாழக்கிழமை முதல் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து அவர் மூன்றாவது நாளாக நடைப்பணத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...