
கோப்புப்படம்
ஆந்திரத்தில் ஹவுரா புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து ஹவுராவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் குப்பம் சென்றபோது இன்று திடீரென தீப்பிடித்தது. ரயில் பெட்டியில் தீப்பிடித்தவுடன் புகை கிளம்பியதை கண்ட பயணிகள் அலறியடி கூச்சலிட்டனர்.
இதையும் படிக்க- இன்று காலாவதியாகிறது ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம்
குப்பம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்ட பின் பயணிகள் இறங்கி தங்கள் உடைமைகளுடன் முண்டியடித்து ஓட்டம் பிடித்தனர். தீப்பிடித்த ரயில் பெட்டியில் இருந்தவர்களை போலீசார் வெளியேறியதால் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
உடனடியாக ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.