தில்லியில் மேலும் ஒரு சம்பவம்: கணவரை 22 துண்டுகளாக்கிய மனைவி!

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகரில் கணவரைக் கொன்று உடற் பாகங்களை 22 துண்டு துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
தில்லியில் மேலும் ஒரு சம்பவம்: கணவரை 22 துண்டுகளாக்கிய மனைவி!
தில்லியில் மேலும் ஒரு சம்பவம்: கணவரை 22 துண்டுகளாக்கிய மனைவி!
Published on
Updated on
1 min read

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகரில் கணவரைக் கொன்று உடற் பாகங்களை 22 துண்டு துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராம்லீலா மைதானம் அருகே துண்டிக்கப்பட்ட தலை மற்றும் பிற பாகங்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததின் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனர். 

கொலை செய்யப்பட்டவர் அஞ்சன் தாஸ் என்று தெரியவந்தது. தாஸை அவரது மனைவி பூனம் மற்றும் மகன் தீபக் சேர்ந்து கொன்றுள்ளனர். அவரது உடல் பாகங்களை 22 துண்டுகளாக்கி குளிர்பதனப் பெட்டியில் வைத்து கிழக்கு தில்லியில் வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர். 

போலீசாரிடம் சிக்கி பூனத்தை விசாரித்தபோது, தன் கணவர் தாஸுக்கு தகாத உறவு இருந்ததாகவும், இதற்காகதான் தன் கணவரை மகனுடன் சேர்ந்த கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து தாஸின் மனைவி, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தில்லியில் காதலியை கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டப்பட்டு உடல் பாகங்களை தனது இல்லத்தில் கிட்டத்தட்ட 3 வாரங்களாக குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த நிலையில், சமீபத்தில் இந்த சம்பவத்தை போலீசார் கண்டறிந்த நிலையில், மீண்டும் இதேபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com