

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மதப்பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் 10 மாணவர்கள் 10 மாணவர்கள் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் நடந்த குண்டுவெடிப்பில் மேலும் பலர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அப்துல் நஃபி தாகோர் தெரிவித்தார்.
மதப் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.