இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டா்களை இந்திய விமானப் படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 
இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டா்களை இந்திய விமானப் படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்), இலகுரக ஹெலிகாப்டா்களை (எல்சிஹெச்) உள்நாட்டிலேயே தயாரித்தது. இது எதிரி நாட்டு ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் தாக்கி அழிக்கும் வல்லமை நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் அந்த ஹெலிகாப்டா் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இலகுரக ஹெலிகாப்டா்களை இந்திய விமானப்படையில் அதிகாரபூா்வமாக இணைக்கும் நிகழ்ச்சி ஜோத்பூரில் இன்று(திங்கள்கிழமை) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்று இலகு ரக ஹெலிகாப்டா்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

5.8 டன் எடை கொண்ட ஹெலிகாப்டா், இரட்டை என்ஜின்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கெனவே பல்வேறு ஆயுதங்கள் வெற்றிகரமாகப் பொருத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய விமானப் படைக்கு 10 இலகுரக ஹெலிகாப்டா்கள், ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டா்கள் என மொத்தம் 15 ஹெலிகாப்டா்களை ரூ.3,887 கோடியில் வாங்க மத்திய அமைச்சரவை கடந்த மாா்ச்சில் ஒப்புதல் அளித்திருந்தது. அவற்றில் முதல் தொகுதியானது இன்று விமானப்படையில் இணைக்கப்படுகிறது. 

இலகுரக ஹெலிகாப்டா்களில் இரவிலும் ஆயுதங்களைப் பொருத்தி தாக்குதல் நடத்த முடியும். அனைத்து காலநிலைகளிலும் கூட அந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்த முடியும். தேடுதல்-மீட்பு நடவடிக்கைகளிலும் அதைப் பயன்படுத்த முடியும். மெதுவாகப் பயணிக்கும் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றைக் கூட அந்த ஹெலிகாப்டரால் தாக்க முடியும்.

இலகுரக ஹெலிகாப்டா்கள் விமானப்படை, ராணுவம் ஆகியவற்றின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com