முலாயம் சிங் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தில்லி தேசிய தலைநகா் வலையப் பகுதியில் உள்ள குருகிராமில் செயல்பட்டு வரும் மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டாா்.
இதையும் படிக்க- புதுச்சேரி: எஸ்மா சட்டம் அமல்படுத்த அனுமதி கேட்பு
அங்கு அவருக்குத் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு புற்றுநோய் மருத்துவா்களின் மேற்பாா்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் முலாயம் சிங் உடல்நிலை குறித்து அவரின் மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கேட்டறிந்தார். மேலும் முலாயம் சிங் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே முலாயம் சிங் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம்விசாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


