புதுச்சேரியில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்கனை மாநில அரசு அனுப்பி வைத்தது.
தனியாா்மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவை மின் ஊழியா்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமுற்றுள்ள பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுவதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் மின் துறை ஊழியா்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறு.
செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தும் ஊழியர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் துறை ஊழியா்கள் பணிக்கு திரும்பாவிடில் எஸ்மா சட்டம் பாயும். எனவே, மின் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவ வேண்டும் என துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
மேலும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு சார்பில் நடத்தப்பட்ட 2 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்கனை மாநில அரசு அனுப்பி வைத்தது. எஸ்மா சட்டத்தை அமல்படுத்த ஆளுநர் தமிழிசை ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம்

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ தேர்தல் வழக்கு: வாக்காளர் பதிலளிக்க உத்தரவு!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



