பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ராஜஸ்தான் விவகாரத்தில் சோனியா காந்தி இறுதி முடிவு எடுப்பார்: சச்சின் பைலட்

ராஜஸ்தான் விவகாரத்தில் சோனியா காந்தி இறுதி முடிவு எடுப்பார் என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். 

Published On :1 பிப்ரவரி 2024, 3:59 pm IST

ராஜஸ்தான் விவகாரத்தில் சோனியா காந்தி இறுதி முடிவு எடுப்பார் என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். 

தில்லியில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சச்சின் பைலட் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் காங்கிரஸ் தலைவரை சந்தித்தேன். நான் சொல்வதை அவர் அமைதியாக கேட்டார். என் உணர்வுகள் மற்றும் கருத்துகளை அவரிடம் கூறினேன். ராஜஸ்தானில் 2023 தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற அனைவரும் விரும்புகிறோம்.

ராஜஸ்தான் விவகாரத்தில் சோனியா காந்தி இறுதி முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

மொத்தம் 200 உறுப்பினா்கள் கொண்ட ராஜஸ்தான் பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளனா். 2020-இல் அசோக் கெலாட்டுக்கு எதிராக 18 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் போா்க்கொடி தூக்கினாா். இதையடுத்து, சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடனும், மூத்த தலைவா்களின் தலையீட்டாலும் சச்சின் பைலட் சமரசம் செய்யப்பட்டாா். இதனால் அப்போது காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதில் இருந்து தப்பித்தது.  

இந்நிலையில், அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடப் போவதாக முதல்வா் அசோக் கெலாட் அறிவித்தார். 

ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பியதால் அவரது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய கோரிக்கை எழுந்தது. அதேசமயம் துணை முதல்வர் சச்சின் பைலட் முதல்வராக அசோக் கெலாட்டின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தொடர்ந்து மோதல் நிலவி வந்தது.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களின் தலையீட்டால்  அசோக் கெலாட் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியதைத் தொடர்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.