புலந்த்சாகர்: உத்தரப் பிரதேசத்தில் ஜம்மு தாவி விரைவு ரயிலின் ஒரு பெட்டி வாயர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதாக அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மூத்த காவல் கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் தெரிவித்துள்ள நிலையில், தடம் புரண்ட பெட்டியை அகற்றும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.
ஜம்மு தாவி விரைவு ரயிலானது ஜம்முவில் இருந்து டாடா நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதன் பெட்டி ஒன்று தடம் புரண்டதைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.