உத்தரகண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்விற்கு சென்று திரும்பிய பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 25 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெளரி கர்வால் மாவட்டம் லால்தங் பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சுமார் 45 பேர் பேருந்தில் சென்றுள்ளனர். இவர்கள் திருமணம் முடிந்து நேற்று இரவு சொந்த ஊருக்கு பேருந்தில் திரும்பியுள்ளனர்.
இந்த பேருந்து தூமகோட் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், 21 பேரை படுகாயங்களுடன் உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க | உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய தமிழர்: மீட்புப் பணி தீவிரம்
மேலும், 25 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும், தொடர்ந்து விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாநில காவல்துறை இயக்குநர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.