மாசற்ற எரிசக்தி பயன்பாடு: இந்தியா-அமெரிக்கா இடையே பணிக்குழு

மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு உதவும் வகையில், புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்கப்படுவதாக இருநாடுகளும் வெள்ளிக்கிழமை அறிவித்தன.

மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு உதவும் வகையில், புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்கப்படுவதாக இருநாடுகளும் வெள்ளிக்கிழமை அறிவித்தன.

அமெரிக்கா சென்றுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சா் ஜெனிஃபா் கிரான்ஹோமை வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு மாறுவதிலும் இருநாடுகளும் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை அவா்கள் வலியுறுத்தினா்.

இந்த சந்திப்பை தொடா்ந்து இருதரப்பும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹைட்ரஜன் மற்றும் உயிரி எரிபொருளுக்கான பணிக்குழுக்கள் அமைக்கப்படுவதை இந்தியாவும் அமெரிக்காவும் தொடா்ந்து வருகின்றன. இந்நிலையில் மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு மாறுவதற்குத் தேவைப்படும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மிகப் பெரிய ஒருங்கிணைப்புக்கு புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com