5ஜி ஃபோன் வாங்கிவிட்டேன்; ஆனால்.. ஏர்டெல், கூகுளுக்குப் பறக்கும் புகார்

5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்கிவிட்டேன். ஆனால் அது வேலை செய்யவில்லை என்று பேடிஎம் தலைமைநிர்வாகி ஷேகர் ஷர்மா டிவிட்டர் பக்கத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.
5ஜி ஃபோன் வாங்கிவிட்டேன்; ஆனால்.. ஏர்டெல், கூகுளுக்குப் பறக்கும் புகார்

புது தில்லி: 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்கிவிட்டேன். ஆனால் அது வேலை செய்யவில்லை என்று பேடிஎம் தலைமைநிர்வாகி ஷேகர் ஷர்மா டிவிட்டர் பக்கத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.

5ஜி சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே புதிய பிக்சல் 6ஏ மாடல் கூகுள் ஸ்மார்ட்ஃபோனை வாங்கியதாகவும், அனைத்து அப்கிரேடுகளையும் செய்துவிட்டேன். ஆனால் 5ஜி சேவை கிடைக்கவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை டிவிட்டரில் தனது புகாரைப் பதிவு செய்த ஷேகர் ஷர்மா ஏர்டெல் மற்றும் கூகுளையும் இந்த புகாரில் டேக் செய்துள்ளார்.

அதோடு, இந்த சுட்டுரைப் பதிவில் 5ஜி சேவையை தேர்வு செய்ய முடியாத வகையில் அதற்கான வாய்ப்பு இணைக்கப்படவில்லை என்பதைக் காட்டும் படத்தையும் இணைத்துள்ளார். 

பிறகு, மற்றொரு பதிவில், கூகுள் நிறுவனம், தனது ஸ்மார்ட்ஃபோனில் 5ஜி சேவையை அப்கிரேடு செய்யவில்லை என்பதால்தான் 5ஜி சேவையை பெறமுடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே பாரதி ஏர்டெல் நிறுவனம் சென்னை உள்ளிட்ட மிக முக்கிய நகரங்களில் அக்டோபர் 1ஆம் தேதியே 5ஜி சேவையை தொடங்கியிருக்கும் நிலையில், கூகுள் தனது ஸ்மார்ட்ஃபோனில் 5ஜி சேவையை அப்கிரேடு செய்வது டிசம்பரில்தான் நடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com