தெருவில் மழைநீர் தேங்குகிறதா? புகார் அளிக்க புதிய செயலி

தெருவில் மழைநீர் தேங்குகிறதா? புகார் அளிக்க புதிய செயலி

குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தொடர்பாக செயலி மூலம் புகார் அளிக்கலாம் என தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Published on


குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தொடர்பாக செயலி மூலம் புகார் அளிக்கலாம் என தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தில்லி மாநகராட்சி சார்பில் மழைநீர் தேக்கம், சாலைகளில் பள்ளம், குப்பை அகற்றாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்க செயலி அறிமுகம் செய்துள்ளது. 

'எம்சிடி 311' (MCD 311 app) என்ற தில்லி மாநகராட்சியின் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் பொதுமக்கள் புகாரளிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இந்த செயலியில் பதிவாகும் அனைத்து புகார்களுக்கும் உடனடித் தீர்வு காணப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com