காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவு வியப்பளிப்பதாக இருக்கும்: சசி தரூர்

"காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவு வியப்பளிப்பதாக இருக்கும்' என்று சசி தரூர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவு வியப்பளிப்பதாக இருக்கும்: சசி தரூர்

"காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவு வியப்பளிப்பதாக இருக்கும்' என்று சசி தரூர் தெரிவித்தார்.
 காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கேவை எதிர்த்துப் போட்டியிடும் சசி தரூர், பிடிஐ செய்தியாளருக்கு தில்லியில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
 எனக்கு ஆதரவு தெரிவிக்காத தலைவர்களும் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பின்போது எனக்கு ஆதரவு தருவார்களா என்று கேட்கிறீர்கள்.
 நிச்சயமாக அப்படி நடக்கும். மூத்த தலைவர்களின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது போன்ற காரணங்களால் என்னை தற்போது வெளிப்படையாக ஆதரிக்காதவர்களும் தனிப்பட்ட முறையில் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 பல்வேறு நிர்வாகிகளும் தாங்கள் எவ்வாறு வாக்களித்தோம் என்பது தங்கள் அரசியல் தலைமைகளுக்குத் தெரிந்து விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
 இதுபோன்ற அச்சங்களைப் போக்க ரகசிய வாக்கெடுப்பு அவசியம். இத்தேர்தலில் அதிகாரபூர்வ வேட்பாளர் யாரும் போட்டியிடவில்லை என்று எங்கள் கட்சி மேலிடம் என்னிடம் உறுதியளித்துள்ளது. எனவே எனக்கு வாக்களிப்பதற்கு என் சக கட்சியினர் ஏன் பயப்பட வேண்டும்?
 கடந்த 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோற்கும் என்று கருதப்பட்ட இந்திய அணி கணிப்புகளை மீறி வெற்றி பெற்றது போல காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவு அமையுமா என்று கேட்கிறீர்கள்.
 இத்தேர்தலில் கட்சியின் மரபுரீதியிலான தலைமைக்கு (சோனியா குடும்பம்) கடந்த 1997, 2000 ஆகிய ஆண்டுகளில் வெற்றி கிடைத்ததுபோல தற்போதும் நடக்கும் என்று கருதுவோர் தேர்தல் முடிவைக் கண்டு வியப்படைவார்கள். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எனக்கு எதிராகப் போட்டியிடுபவரை (மல்லிகார்ஜுன கார்கே) ஆதரிக்குமாறு இத்தேர்தலில் வாக்களிப்போருக்கு "அவர்களின் தலைவர்கள்' அறிவுறுத்தியுள்ளனர். எனினும் தலைவர் தேர்தல் முடிவு அவர்களுக்கு வியப்பளிப்பதாக இருக்கும்.
 நான் ஏற்கெனவே கூறியபடி கார்கே வெற்றி பெற்றாலும் நான் வெற்றி பெற்றாலும் அதை தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக நான் உருவகப்படுத்த மாட்டேன். இதில் வெற்றி என்பதை இந்திய தேசிய காங்கிரஸýக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுவேன். 2024 மக்களவைத் தேர்தல் நெருங்குகிறது. அதுவே முக்கியமாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com