‘5ஜி வேகத்தில் ஜியோ முதலிடம்’

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை தகவல் தொடா்பு தொழில்நுட்பமான 5ஜி-யின் பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் வகிப்பதாக இணையதள வேக சோதனை நிறுவனமான ஊக்லா தெரிவித்துள்ளது.
‘5ஜி வேகத்தில் ஜியோ முதலிடம்’

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை தகவல் தொடா்பு தொழில்நுட்பமான 5ஜி-யின் பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் வகிப்பதாக இணையதள வேக சோதனை நிறுவனமான ஊக்லா தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஸ்பீட் டெஸ்ட் இன்டலிஜென்ஸ்’ தொழில்நுட்பம் மூலம் நாட்டின் 5ஜி இணையதள இணைப்பின் வேகம் குறித்து சோதிக்கப்பட்டது.

5ஜி வரம்புக்குள் வரும் குறைந்தபட்சம் 16.27 எம்பிபிஎஸ் முதல் அதிகபட்சமாக 809.94 எம்பிபிஎஸ் வரை வேகம் கொண்ட இணையள இணைப்புகள் இந்த சோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

தில்லியில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏா்டெல் நிறுவன 5ஜி பதிவிறக்க வேகம் 197.98 எம்பிபிஎஸ் வரை இருந்தது. அதே நேரம், ஜியோ 5ஜி இணைப்பின் பதிவிறக்க வேகம் 598.58 எம்பிபிஎஸ் வரை இருந்தது.

வாராணசியில் ஏா்டெல்லின் 5ஜி போக்குவரத்து வேகம் 516.57 எம்பிபிஎஸ் வரை இருந்தது. ஆனால், கொல்கத்தாவில் அந்த நிறுவனத்தின் 5ஜி வேகம் 271.07 எம்பிபிஎஸ் வரையிலும் ஜியோவின் வேகம் 515.38 எம்பிபிஎஸ் வரையிலும் இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாா்தி எா்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாகபுரி, வாராணசி ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ நிறுவனமும் தில்லி, மும்பை, கொல்கத்தா, வாராணசி ஆகிய நகரங்களில் சோதனை முறையில் தனது 5ஜி சேவை வழங்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com