
தில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் 2-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தில்லி மெட்ரோ விஹாா் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சன் மண்டல் (31). இவா் நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா். தொழிற்சாலையின் 2-ஆவது தளத்தில் இயந்திரத்தைப் பொருத்த சென்றபோது கால் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...