காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 8,000-க்கும் அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகிய இருவரும் களம் கண்டனா். மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 68 இடங்களில், ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 96% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீலிடப்பட்டு, தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

தொடர்ந்து தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. 

இதில், மல்லிகாா்ஜுன காா்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளரான சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றிருப்பதாகவும் 416 வாக்குகள் செல்லாதது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

முன்னதா, சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பது கெளரவம், பெரிய பொறுப்பு என்றும் அந்த பணியில் ஈடுபடவுள்ள கார்கேவுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலமாக, 22 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சித் தலைவராகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com