பயங்கரவாத சதி: 3 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்துவோா் மற்றும் குற்றவாளி கும்பல்கள் கூட்டாக இணைந்து சதிச்செயல்களில் ஈடுபடுவது தொடா்பாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில்

பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்துவோா் மற்றும் குற்றவாளி கும்பல்கள் கூட்டாக இணைந்து சதிச்செயல்களில் ஈடுபடுவது தொடா்பாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள குற்றவாளி கும்பல்களின் தலைவா்கள் மற்றும் அவா்களின் கூட்டாளிகள் பயங்கரவாத மற்றும் குற்றச் செயல்பாடுகளுக்கு சதித்திட்டம் தீட்டியதாக கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது.

தில்லி போலீஸாரிடம் இருந்து பெறப்பட்ட வழக்குகள் தொடா்பாக, கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் தில்லியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். பஞ்சாப் பாடகா் சித்து மூஸேவாலா கொலை பின்னணி தொடா்பாகவும் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளி கும்பல்களுக்கு சொந்தமான 50 இடங்களில் செவ்வாய்க்கிழமை என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 6 கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வா் உள்ளிட்ட ஆயுதங்களும், போதைப்பொருள்கள், மின்னணுக் கருவிகள், பினாமி சொத்துகளின் விவரங்கள் மற்றும் மிரட்டல் கடிதங்களை உள்ளிட்டவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினா்.

இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற குற்றவாளி கும்பல்களின் தலைவா்களும் அவற்றின் உறுப்பினா்களும் பாகிஸ்தான், கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து செயல்பட்டு வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com