சித்து மூஸேவாலா கொலை வழக்கு: தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது

சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தப்பியோடிய முக்கிய குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தீப்
சந்தீப்

சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தப்பியோடிய முக்கிய குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த மே மாதம் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

உயிரிழந்த சித்துவின் தந்தை சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கோரியிருந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டிருந்தது. 

இதனையடுத்து இந்த வழக்கின் முதல் கட்டமாக 8 பேரை கைது செய்து விசாரித்து வந்த காவல்துறை பின்னர் பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்தனர். 

மேலும், பிஷ்னோய் கூட்டாளிகள் இருவர் பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தர் மாவட்டத்தில் உள்ள சீச்சா பக்னா மாவட்டத்தில் பதுங்கியிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சந்தீப் என்பவரை சிறப்பு காவல் பிரிவினர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com