மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

செப்டம்பர் மாத ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய அவகாசம்

கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு நாள் கால அவகாசத்தை நீட்டித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரித்துறை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

News image

செப்டம்பர் மாத ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய அவகாசம்

Updated On :21 அக்டோபர் 2022, 9:55 am


புது தில்லி: கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு நாள் கால அவகாசத்தை நீட்டித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரித்துறை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட சில வரி செலுத்துவோருக்கு மாதாந்திர ஜிஎஸ்டி செலுத்துவதற்கான கடைசி நாள் 20ஆம் தேதி என்ற நிலையில், வியாழக்கிழமையன்று ஜிஎஸ்டி ரிட்டர்ன் செய்வதற்கான இணையதளத்தில் சுணக்கம் ஏற்பட்டதாக வரி செலுத்துவோர் புகார் அளித்திருந்த நிலையில், இன்று ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் சுணக்கம் ஏற்பட்டதால், வரி செலுத்துவோருக்கு கூடுதலாக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.