
உத்தரகண்ட் கேதார்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் விமான நிலையம் வந்தார். அவரை மாநில ஆளுநர் குர்மீத் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றனர்.
பின்னர் கேதார்நாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த பிரதமர் மோடி, ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் சென்றார்.
ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் கடந்த 2013 வெள்ளத்தில் சேதமடைந்ததையடுத்து மறுசீரமைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது.
கேதார்நாத் ரோப் சேவை உள்பட உத்தரகண்ட் மாநிலத்தில் ரூ. 3,400 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும் கேதார்நாத்தில் மந்தாகினி அஷ்டபதி மற்றும் சரஸ்வதி அஷ்டபதி பணிகளையும் மேற்பார்வையிடுகிறார்.
தொடர்ந்து பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்தார்.
இதையும் படிக்க | 'இந்திய இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலியானது தீவிரப் பிரச்னை'