
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,112 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 4 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தினசரி வெளியிட்டு வருகிறது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,112 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,957 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | சிறுபான்மையின மாணவா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,102 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,84,646 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 24,043 ஆகக் குறைந்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,53,88,326 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 2,90,752 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.