மக்களை கடைக்கு வரவழைக்க படாதபாடுபடும் வியாபாரிகள்

இரண்டு ஆண்டுகளாக கடைகளுக்குச் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தவர்களின் பாக்கெட்டை அவர்களுக்குத் தெரியாமலேயே காலி செய்ய பல ஆன்லைன் ஷாப்பிங் செயலிகள் வந்துவிட்டன.
மக்களை கடைக்கு வரவழைக்க படாதபாடுபடும் வியாபாரிகள்
மக்களை கடைக்கு வரவழைக்க படாதபாடுபடும் வியாபாரிகள்


புது தில்லி: இரண்டு ஆண்டுகளாக கடைகளுக்குச் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தவர்களின் பாக்கெட்டை அவர்களுக்குத் தெரியாமலேயே காலி செய்ய பல ஆன்லைன் ஷாப்பிங் செயலிகள் வந்துவிட்டன.

மக்களுக்கும் கடைகடையாக ஏறி இறங்கி பொருள்களை பார்த்து பார்த்து வாங்குவதில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

எப்போது பார்த்தாலும் ஆன்லைன் ஷாப்பிங் மூலமாகவே அனைத்தையும் வாங்கி சொகுசுகண்ட மக்கள் பலரும் மீண்டும் கடைகள் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை.

இந்த நிலையை மாற்ற புது தில்லியில் உள்ள சந்தை வியாபாரிகள், மக்களை தங்கள் பக்கம் ஈர்த்து கடைத்தெருக்களுக்கு வரவழைக்கப் பல புதிய யுக்திகளைக் கையாண்டு வருகிறார்கள்.

சந்தைகளை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் ஒளியூட்டுவது, அதிர்ஷ்ட கூப்பன்கள், செல்ஃபி எடுக்க தனியிடம் என பலவற்றையும் அமைத்து வருகிறார்கள்.

அதுபோல, பொதுமக்களையும் அவர்கள் நேரடியாக கடைகளுக்கு வந்து பொருள்களை வாங்கவும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பொருள்களை வாங்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.

கடைக்கு வந்து நேரடியாக பொருள்களைப் பாருங்கள். உங்கள் செல்லிடப்பேசி ஸ்க்ரீனில் அல்ல என்றும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மிகப்பெரிய கடைகள் நிறைந்த பகுதிகளில் கூட்டம் அலைமோதினாலும், சிறு சிறு கடைகளுக்குள் கூட கூட்டம் நெருக்கும் நிலை தற்போது காணப்படுவதில்லை என்பதும் கவலைதரும் விஷயம்தான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com