
கோப்புப்படம்
மத்தியப் பிரதேசத்தின், போபால் புறநகரில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) டிப்போவில் டேங்கரின் கொள்கலனில் பெட்ரோல் நிரப்பும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவர் படுகாயமடைந்தனர்.
பகானியா பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கஜூரி காவல் நிலையப் பொறுப்பாளர் சந்தியா மிஸ்ரா தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பில் மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் ஆறு பேர் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஓட்டுநர்கள், தங்கள் டேங்கர்களில் எரிபொருள் நிரப்ப அங்கு வந்தனர், ஒருவர் பிபிசிஎல்-யின் ஊழியர் என்று அவர் கூறினார்.
படிக்க: ஜார்க்கண்டில் மென்பொறியாளர் 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்!
அவர்களில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மிஸ்ரா கூறினார்.
வெடி விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.