9 பல்கலை.யின் துணைவேந்தர்கள் இன்றைக்குள் பதவி விலக வேண்டும் என்ற கேரள ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
அந்த மாநிலத்தில் உள்ள மேலும் சில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், யுஜிசி விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் நியமனமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிக்க- தீபாவளி: தமிழகத்தில் 2 நாள்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை
இந்நிலையில், கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.
அந்தப் பதிவுடன் எந்தெந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் அவா் இணைத்திருந்தாா். அக்.24-ஆம் தேதி அனைவரும் ராஜிநாமா கடிதங்களை அனுப்ப வேண்டும் என்று அவா் உத்தரவிட்டுள்ளாா்.
இந்த நிலையில் பதவி விலக வேண்டும் என்ற கேரள ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். இம்மனுக்களை அவசர வழக்காக கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று மாலை 4 மணிக்கு விசாரிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 அமைச்சர்கள் பதவியேற்பு!

தவெக இதைச் செய்ய வேண்டும்: மு. வீரபாண்டியன் வலியுறுத்தல்! | CPI | TVK |
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



