காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தீபாவளி: தமிழகத்தில் 2 நாள்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாள்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

கோப்புப் படம்.

Published On :

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாள்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். இதில் இதர பண்டிகைகளை விட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனையாகிள்ளது.  

சென்னையில் மட்டும் 22,23 ஆகிய தேதிகளில் டாஸ்மாக்கில் ரூ.90.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் நேற்று மதுரை மண்டலம்- ரூ.55.78 கோடி, சேலம்-ரூ.52.36 கோடி, சென்னை மண்டலம்- ரூ.51.52 கோடி, திருச்சி மண்டலம்- ரூ.50.66 கோடி, கோவை மண்டலம்- ரூ.48.47 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. 

அதேசமயம் கடந்த ஆண்டு தீபாவளியன்று ரூ.431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.