''பொட்டு இல்லனா.. தொழில் செய்யக் கூடாது'' வைரலாகும் ஹிந்துக்களின் பதிவுகள்

பொட்டு வைக்கவில்லை என்றால் தொழில் செய்யக்கூடாது என்பதை குறிப்பிடும் வகையில், நோ பிந்தி, நோ பிஸ்னஸ் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. 
''பொட்டு இல்லனா.. தொழில் செய்யக் கூடாது'' வைரலாகும் ஹிந்துக்களின் பதிவுகள்
Published on
Updated on
2 min read


பொட்டு வைக்கவில்லை என்றால் தொழில் செய்யக்கூடாது என்பதை குறிப்பிடும் வகையில், நோ பிந்தி, நோ பிஸ்னஸ் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. 

ஹிந்துக்களின் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றாமல், ஹிந்துக்களிடம் எந்த பொருள்களையும் விற்பனை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். 

ஷெஃபாலி வைத்யா என்ற எழுத்தாளர் டிவிட்டரில் விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில் தனியார் ஆடை நிறுவனம் பொட்டு வைக்காமல் தங்களது விளம்பர தூதர்களை நடிக்கவைப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக ஷெஃபாலி வைத்யா பதிவிட்டுள்ள விடியோவில், பொட்டு வைக்காமல் விளம்பர தூதர்களை நடிக்கவைக்கும் நிறுவனங்களின் ஆடைகளை நான் தீபாவளி பண்டிகைக்காக வாங்கப்போவதில்லை. பொட்டு வைக்கவில்லை என்றால் வியாபாரம் செய்ய முடியாது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆடை நிறுவனம் இந்தியாவிலுள்ள மக்களுக்கு ஆடைகளை விற்பனை செய்கிறது. ஹிந்து பண்டிகையை குறிவைத்து நடத்தப்படும் வியாபாரத்திற்கு ஹிந்து கலாசாரம் கடைபிடிக்கப்படவில்லை. நோ பிந்தி, நோ பிஸ்னஸ் என ஹேஷ்டேக் இட்டு பதிவிட்டுள்ளார். இந்த விடியோவை ஹிந்து ஆதரவாளர்கள் பலர் பதிவை மறுமுறை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். 

ஒரு சிலர் இதற்கு எதிராகவும் சுட்டுரையில் குரல் எழுப்பி வருகின்றனர். பொட்டு வைப்பதும், வைக்காததும் தனிநபர் விருப்பம். தனி நபரின் விருப்பத்தில் பொட்டு வைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு இடமில்லை எனப் பதிவிட்டுள்ளனர். 

ஒருசிலர் பொட்டு வைத்து வெளியான விளம்பரங்களையும் படங்களையும் பகிர்ந்து ஹிந்து மதத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.

அதில்,ஹிந்துக்களின் பணம் வேண்டும் என்றால், ஹிந்துக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். விளம்பரங்களில் நடிப்பவர்களை பொட்டு வைக்காமல் இறுதிச்சடங்கில் இருப்பவர்களைப் போன்று காட்டுவது ஹிந்துக்களுக்கு எதிரான பிரகடனம் எனவும் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

நாட்டில் ஹிஜாப், ஜெய் ஸ்ரீராம், இறைச்சி போன்றவற்றை மதத்தின் அடிப்படையில் சேர்ந்ததாக கருதி பிரச்னைகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், தற்போது விளம்பர தூதர்கள் மற்றும் விளம்பரங்களை வைத்து பிரச்னைகள் எழுந்து வருவதாக பலர் கருதுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com