பதவி விலக மறுத்த 9 துணை வேந்தர்களுக்கு நோட்டீஸ்: கேரள ஆளுநர்

பதவி விலக மறுத்த 9 பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பதவி விலக மறுத்த 9 துணை வேந்தர்களுக்கு நோட்டீஸ்: கேரள ஆளுநர்

பதவி விலக மறுத்த 9 பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பதவி விலக மறுப்பது குறித்து நவம்பர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆளுநர் ஆரிப் கான் நேற்று கூறியிருந்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணைவேந்தா், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து கேரளத்திலுள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்ட முறை கேள்விக்குறியாகியுள்ளது.

இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி கேரளத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சுட்டுரையில் உத்தரவிட்டிருந்தார். 

ராஜிநாமா செய்ய வேண்டிய பல்கலைக் கழக துணை வேந்தர்களின் பட்டியலையும் இணைந்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com