கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சுந்தர் பிச்சை இப்படியெல்லாம்கூட 'ரிப்ளை' தருவாரா?

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின் கடைசி 3 ஓவர்களை திரும்பப் பார்த்து தீபாவளியைக் கொண்டாடியதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :24 அக்டோபர் 2022, 2:29 pm

DIN


இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின் கடைசி 3 ஓவர்களை திரும்பப் பார்த்து தீபாவளியைக் கொண்டாடியதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலியின் மிரட்டலால் இந்திய அணி கடைசி பந்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்து வந்த நிலையில், சுந்தர் பிச்சையும் இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சையின் பதிவு:

"தீபாவளி வாழ்த்துகள்! நான் கடைசி 3 ஓவர்களை இன்று திரும்பப் பார்த்து தீபாவளியைக் கொண்டாடினேன். என்னவொரு ஆட்டம்!"

இந்தப் பதிவின் கீழ், "முதல் மூன்று ஓவர்களை நீங்கள் பார்க்க வேண்டும்" என ஒருவர் கமென்ட் செய்துள்ளார். இதற்கு, "அதையும் பார்த்தேன். புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் எவ்வளவு சிறப்பாகப் பந்துவீசினர்.." என சுந்தர் பிச்சை பதிலளித்தார்.

பாகிஸ்தான் வீசிய முதல் 3 ஓவர்களில் இந்திய வீரர்கள் திணறியதைக் குறிப்பிட்டு கேலி செய்யும் வகையில் பதிவிட்ட அவருக்கு, சுந்தர் பிச்சை அதே பாணியில் கேலி செய்து பதிலளித்தது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.