மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?

புதிய கட்சித் தொடங்கியிருக்கும் சசிகலா, தன்னுடைய கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்று அறிவித்திருப்பது பற்றி..

Sasikala

சசிகலா - DPS

Published On :

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சித் தொடங்கியிருக்கும் சசிகலா, தன்னுடைய கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்று அறிவித்திருக்கிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தமாகா, தென்னந்தோப்பு சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

அப்போது அவர் பேசுகையில், நான்கு தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னத்தின் மூலம் தேர்தலை சந்திக்க உள்ளோம். எல்லாத் தாவரங்களையும் செடி, கொடி, மரம் என்பர். தென்னையை மட்டுமே தென்னம்பிள்ளை என்பர். தமிழக மக்களின் பிள்ளையாக தமாகா மாறும், அதற்காகப் பணியாற்றுவோம் என்று கூறியிருந்தார்.

Story image

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, புதிய கட்சியைத் தொடங்குவதாக ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் பிப். 24-ஆம் தேதி அறிவித்த நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்தார். கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டிருப்பதாகவும், அதற்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

மக்கள் நலனுக்காக புதிய கட்சியைத் தொடங்குகிறேன் எனக் கூறி, அண்ணா, எம்ஜி ஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய கொடியை அறிமுகம் செய்து, ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில், பரபரப்பைக் கூட்டியிருந்த சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று கட்சிக்குப் பெயர் சூட்டியிருக்கிறார்.

இன்று சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தென்னந்தோப்பு சின்னம் இதற்கு முன்பு தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

2002ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சைக்கிள் சின்னத்துடன் இருந்த தமாகா, தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது சைக்கிள் சின்னத்துக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர், அந்த சைக்கிள் சின்னத்தை ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சியும், உத்தரப்பிரதேசத்தில் சமாஜவாதி ஜனதா கட்சியும் பயன்படுத்தி வந்தன.

அதன்பிறகு, 2016ஆம் ஆண்டு தமாகாவுக்கு தென்னந்தோப்பு சின்னம் வழங்கப்பட்டது. ஆனால், அப்போதே, தென்னந்தோப்பு சின்னத்தை கைவிட்டு, அதிமுகவுடன் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுமாறு ஜி.கே. வாசனுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்ததாகவும், தென்னந்தோப்பு சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று கூறி நல்வாய்ப்பை இழந்த ஜி.கே வாசன், பின்னாளில், அதிமுக சின்னத்தில் மாநிலங்களவைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது வேறு கதை.

தற்போது, சசிகலா தொடங்கியிருப்பது புதிய கட்சியல்ல என்றும், தொண்டர் ஒருவர் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தொடங்கிய கட்சியில்தான் தான் இணைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Summary

Regarding Sasikala, who has started a new party, announcing that her party's symbol will be a coconut grove..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.