சத் பூஜை: கங்கை நதியில் 21 அடி நீள ஓவியத்தை அமைத்த பிகார் கலைஞர்கள்!

சத் பூஜையை முன்னிட்டு கங்கை நதியில் பிகார் கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து 21 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்ட ஓவியத்தை கங்கை நதியில் காட்சிப்படுத்தினர். 
சத் பூஜை: கங்கை நதியில் 21 அடி நீள ஓவியத்தை அமைத்த பிகார் கலைஞர்கள்!

சத் பூஜையை முன்னிட்டு கங்கை நதியில் பிகார் கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து 21 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்ட ஓவியத்தை கங்கை நதியில் காட்சிப்படுத்தினர். 

சத் பூஜை பிகார், ஜார்க்கண்ட் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது நான்கு நாள் நடைபெறும் பிரம்மாண்ட திருவிழாவாகும். 

இந்த திருவிழாவில் சூரிய பகவானுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தாண்டு அக் 28 முதல் 31-ம் தேதி வரை சத் பூஜை கொண்டாடப்படுகிறது. 

சத் பூஜை ஓவியம் குறித்து அமிட்டி பல்கலை துணைவேந்தர் விவேகானந்த் பாண்டே கூறுகையில், 

சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இரண்டும் மிக முக்கியம் என்பதை இந்த திருவிழா காட்டுகிறது. உலகம் முழுவதும் இந்த ஓவியம் சென்றடைய விரும்புகிறோம். உலக சாதனை புத்தகத்தில் சமர்ப்பிப்போம் என்றார். 

அமிட்டி பல்கலை மாணவி ஒருவர் கூறுகையில், 

இந்த புனிதமான சத் திருவிழாவை தொடங்கிய திரௌபதி மற்றும் சீதா தேவி ஆகிய இரு முக்கிய கதாபாத்திரங்களை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. 

பருத்தி துணிகளில் இருந்து இந்த ஓவியம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தின் மூலம், "சத் பூஜை என்பது பழைய தலைமுறைக்கு மட்டுமல்ல, புதிய தலைமுறையினர் எவ்வாறு பங்களிக்க முடியும் என்ற செய்தியையும் வெளிப்படுத்துகிறது. மஞ்சள், இண்டிகோ, சந்தனப் பொடி ஆகிய இயற்கைப் பொருள்களை இந்த ஓவியத்திற்குப் பயன்படுத்தியுள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com