மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் நீர் கொட்டுகிறதா? இதோ அருமருந்து!

மழைக்காலம் தொடங்கிவிட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நின்று நம்மைப் படாதபாடு படுத்திவிடும்.
மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் நீர் கொட்டுகிறதா? இதோ அருமருந்து!
Published on
Updated on
1 min read

பொதுவாகவே மழைக்காலம் தொடங்கிவிட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நின்று நம்மைப் படாதபாடு படுத்திவிடும். 

ஒரு சிலர் என்னதான் மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்டாலும் மழைக்கால சீசன் போன்று, ஜலதோஷ சீசன் வந்துவிடும். இந்த பிரச்னைகள் உள்ளவர்கள் நமக்குக் கிடைக்கும் எளிய பொருள்களைக் கொண்டு இயற்கை முறையில் தீர்வு காணலாம். 

இதற்கு தேவையான பொருள்கள் - தூதுவளைக் கீரை -  ஒரு கைப்பிடி, சீரகம்.       -  ஒரு ஸ்பூன், பூண்டு - 5 பல், மிளகு - 10 பல், மஞ்சள்-  சிறிதளவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். 

முதலில் தூதுவளைக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். பூண்டு, மிளகு ஆகியவற்றைத் தட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள தூதுவளை , சீரகம், தட்டி வைத்துள்ள  மிளகு, பூண்டு மற்றும்  மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து நீரை பாதியளவாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டவும்.

இந்தக் கசாயம்  மூக்கடைப்பு , தும்மல் மற்றும் மூக்கில் நீர் கொட்டுதல் போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருமருந்தாகும். 

இதனை காலை மாலை என இருவேளையும் தயார் செய்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக  குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பயன்படுத்தி பலன் பெறுங்கள். 

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்  - கோவை பாலா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.