
குஜராத் புத்தாண்டு தினத்தையொட்டி அம் மாநில மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘அனைத்து குஜராத் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டு தொடக்கம் உங்கள் வாழ்வில் ஒளியேற்றி, முன்னேற்றப் பாதையில் உங்களை அழைத்துச் செல்லட்டும். புதிய தீா்மானங்கள், புதிய உத்வேகங்கள், புதிய இலக்குகளுடன் குஜராத் மாநிலம் எப்போதும் சாதனைகளின் உச்சத்தில் உயரும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.