எலோன் மஸ்க்கிற்கு வாழ்த்து... ட்விட்டர் வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிராக செயல்படும்: ராகுல் காந்தி

சா்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை வாங்கி உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
எலோன் மஸ்க்கிற்கு வாழ்த்து... ட்விட்டர் வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிராக செயல்படும்: ராகுல் காந்தி

புது தில்லி: சா்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ட்விட்டரில் எலோன் மஸ்க்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ட்விட்டர் பின்தொடர்பவர்கள் கையாளப்பட்ட தரவுகளைவும் பகிர்ந்துள்ளார். 

ராகுல் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எலோன் மஸ்க்கிற்கு "வாழ்த்துக்கள்". இனி ட்விட்டர் நிறுவனம் வெறுப்பூட்டும் பதிவு, பேச்சுகளுக்கு எதிராக செயல்படும் என்றும், மேலும் உண்மைத் தன்மையை சரிபார்த்து இன்னும் வேகமாக செயல்படும் என்று நம்புகிறேன்.

மேலும், ஆளும் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் குரலை இனி ஒடுக்காது" என்று காந்தி கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பரில், மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் தன்னைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். 

மார்ச் மாதத்தில், இந்த விஷயத்தை மீண்டும் எழுப்பியது காங்கிரஸ் கட்சி, பின்தொடர்பவர்களின் அடுத்தடுத்த வெற்றிகள், எண்ணிக்கையில் முந்தைய முடக்கம் "வெளிப்புற செல்வாக்கால் வழிநடத்தப்பட்டது" என்பதை நிரூபிக்கிறது என்று குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக டிசம்பர் 27 இல் இந்தியரான ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு ராகுல் எழுதிய கடிதத்தில், "இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான பதிவை தடுப்பதில் ட்விட்டர் அறியாமல் உடந்தையாக இருப்பதாக நான் நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

மேலும், ஆகஸ்ட் 2021 முதல், தனது கணக்கு முடக்கப்பட்டதிலிருந்து பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறிய ராகுல், இதற்கு முன்னதாக மாதத்திற்கு 2.3 லட்சத்துக்கும் அதிகமான புதிய பின்தொடர்பவர்களைப் பெற்று வந்ததாகவும், அது 6.5 லட்சமாக உயர்ந்ததாகவும் கூறினார். 

தனது ட்விட்டர் கணக்கிலிருந்து தரவுகளின் பகுப்பாய்வையும் பகிர்ந்து கொண்ட ராகுல், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 19.6 மில்லியனாக இருந்த நிலையில் பல மாதங்களாக அரிதாகவே அதிகரித்துள்ளது என்பதையும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

எலோன் மஸ்க் ட்விட்டர் வாங்கியதற்கான காரணம் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், ‘மேலும் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ட்விட்டரை வாங்கவில்லை; எதிா்கால மனித சமூகத்தின் நலனைக் கருத்தில்கொண்டே ட்விட்டரை வாங்கியுள்ளேன்.

ட்விட்டா் தளமானது தற்போது வலதுசாரி, இடதுசாரி கருத்துகளால் நிரம்பியுள்ளது. இது மக்களிடையே பிரிவினையை மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது. அதைக் கருத்தில் கொண்டு, எதிா்காலத்துக்குரிய வன்முறைகள் அற்ற ஆரோக்கியமான விவாதங்களுக்கான எண்ம (டிஜிட்டல்) களமாக ட்விட்டா் விளங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அதை வாங்கியுள்ளேன்.

கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படும் அதே வேளையில், விளைவுகளை உணராமல் எவரும் எத்தகைய கருத்துகளையும் ட்விட்டரில் தெரிவிக்க அனுமதிக்கப்படாது. நாடுகளின் விதிகளுக்கு மதிப்பளித்து அனைவரையும் ட்விட்டா் வரவேற்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com