அசாம் இணைச் செயலாளர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட அசாம் அரசின் இணைச் செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அசாம் அரசின் இணைச் செயலளார் கிசான் குமார் சர்மா, "பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக லஞ்சம்  ரூ.90,000 வாங்கியபோது கையும் களவுமாக பிடிப்பட்டதை அடுத்து அவரை வெள்ளிக்கிழமை இரவு லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்" என்று காவல்துறையின் சிறப்பு இயக்குநர் ஜெனரல் ஞானேந்திர பிரதாப் சிங் கூறினார்.

மேலும், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.49.24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறினார். 

அசாம் அரசின் இணைச் செயலளார் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அசாம் மாநில அரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com