பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஈரான் போர்! இப்போதுதான் வலி ஆரம்பித்துள்ளது: ராகுல்

எரிவாயு தட்டுப்பாடு குறித்து இப்போதுதான் வலி ஆரம்பித்துள்ளது என்று மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

Rahul Gandhi

ராகுல் காந்தி - PTI

Published On :

எரிவாயு தட்டுப்பாடு குறித்து இப்போதுதான் வலி ஆரம்பித்துள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவையில் எரிவாயு தட்டுப்பாடு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில் "மத்திய கிழக்கில் ஒரு போர் வெடித்துள்ளது. போரில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்தப் போர் பெரிய மற்றும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவிகிதம் மேற்கொள்ளப்படும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது.

நமது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருவதால், இது நமக்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.

இப்போதுதான் வலி ஆரம்பித்துள்ளது. உணவகங்கள் மூடப்படுகின்றன, எல்பிஜி தட்டுப்பாடு பற்றிய பரவலான அச்சமும் ஏற்பட்டுள்ளது. இது ஒரு தொடக்கம் மட்டுமே.

ஒரு நாட்டின் எரிசக்தி பாதுகாப்புதான் அதன் அடித்தளம். நாம் யாரிடமிருந்து எண்ணெய் வாங்குகிறோம், யாரிடமிருந்து எரிவாயு வாங்குகிறோம், ரஷியாவிடமிருந்து வாங்கலாமா வேண்டாமா என்பதை அமெரிக்கா தீர்மானிக்க அனுமதிக்கப்படுகிறது.

ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்க வேறொரு நாடோ வேறு நாட்டின் அதிபரோ ஏன் அனுமதிக்க வேண்டும்?

இதற்கான புதிரை நான் கண்டுபிடித்து விட்டேன். இந்தப் புதிர் சமரசம் பற்றியது. இங்கு அமர்ந்திருக்கும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் எப்ஸ்டீனின் நண்பர் என்று அவரே கூறினார்" என்று தெரிவித்தார்.

Summary

US - Iran war could have major impact on India: Rahul Gandhi warns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.