பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி

மேற்காசியப் போர் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க ராகுல் காந்தி வலியுறுத்துவது பற்றி...

PM Modi will not be able to come to parliament: Rahul gandhi

ராகுல் காந்தி - IANS

Published On :

மேற்காசியப் போர் விவகாரம் முக்கியமானது இல்லையா? அதுபற்றி விவாதிக்கத் தேவையில்லையா? என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போரால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிசக்தி துறையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள சூழலில் அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்னர் வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"இஸ்ரேல் - ஈரான் போரால் ஏற்பட்டுள்ள மேற்காசிய நெருக்கடி எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தும்? ஒரு மாற்றத்தை நோக்கி போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இது நமது பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். இன்று பங்குச்சந்தை நிலவரத்தை நீங்கள் பார்த்தீர்கள். பிரதமர் மோடி அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்தியா பெரும் பாதிப்பைச் சந்திக்கப் போகிறது. அப்படியிருக்க அதைப்பற்றி விவாதிப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்னை? அதன் பிறகு மற்ற பிரச்னைகள் குறித்து நாம் விவாதம் செய்யலாம்.

மேற்காசியப் போர் விவகாரம் முக்கியமானது இல்லையா? எரிபொருள் விலை மற்றும் பொருளாதாரச் சீரழிவு விவாதத்திற்கு முக்கியமான விஷயம் இல்லையா? இவை எல்லாம் பொதுப் பிரச்னைகள். இவற்றையே நாங்கள் முக்கியமானதாக நினைக்கிறோம். அதைப்பற்றி விவாதிக்க விரும்புகிறோம். ஆனால், மக்களின் பிரச்னைகள் பற்றி அவர்கள் விவாதிக்க விரும்பவில்லை. அப்படி செய்தால் பிரதமர் மோடியின் நிலைப்பாடு வெளியே தெரிந்துவிடும். அமெரிக்காவால் பிரதமர் மோடி எப்படி சமரசம் செய்யப்படுகிறார், எப்படி மிரட்டப்படுகிறார் என்பது குறித்து விவாதம் நடைபெறும். அதனால்தான் பாஜகவினர் இதைப்பற்றி விவாதிக்க மறுக்கிறார்கள்.

பிரதமர் எப்படி நாடாளுமன்றத்தைவிட்டு ஓடினார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். அவரால் திரும்பி வர முடியாது" என்று கூறினார்.

Summary

PM Modi will not be able to come to parliament: Rahul gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.