உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

எப்ஸ்டீன் கோப்பு, அதானி வழக்கின் இடையில் சிக்கியுள்ள பிரதமர் மோடி: ராகுல்

அமெரிக்காவின் கைப்பிடியில் பிரதமர் மோடி சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம்

Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - விடியோ க்ளிப்

Published On :

அமெரிக்காவின் கைப்பிடியில் பிரதமர் நரேந்திர மோடி சிக்கியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்தில் நடைபெற்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில், "நமது நாட்டுக்காக மரண ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டது ஏன்? அவருக்கு என்ன அழுத்தம் தரப்பட்டது? நமது விவசாயிகளுக்கான மரண உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.

அவர் எங்களின் தரவுகளை வழங்கியுள்ளார். எங்களின் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மரண உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவில் 35 லட்சம் எப்ஸ்டீன் கோப்புகள் உள்ளன. அதில் அனில் அம்பானி, ஹர்தீப் சிங் புரி ஆகியோரின் பெயர்களும் உள்ளன.

பிரதமர் மோடியின் பெயரும் அதில் சிக்கியுள்ளது. அமெரிக்காவும் டிரம்ப்பும் பிரதமர் மோடியை அச்சுறுத்துகின்றனர்.

நீங்கள் (பிரதமர் மோடி) கையெழுத்திடாவிட்டால், கோப்புகளை வெளியிடுவோம் என்று அமெரிக்கா சொல்கிறது.

கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் பாஜக தனது முழு நிதியமைப்பும் அதானியின் நிறுவனத்த்தைத்தான் சார்ந்துள்ளது. அமெரிக்காவில் அதானிக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகள், அதானியின் மீதான வழக்கு என்ற இரு கைகளுக்கு நடுவில் பிரதமர் மோடியின் கழுத்து மாட்டியுள்ளது" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Summary

America and Donald Trump are threatening Narendra Modi, says Congress Leader Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.