இந்தியாவில் இணையவழி குற்றங்கள் 5% அதிகரிப்பு

இந்தியாவில் இணையவழியில் நடைபெறும் குற்றங்கள் கடந்த ஆண்டில் (2021) 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இணையவழி குற்றங்கள் 5% அதிகரிப்பு

இந்தியாவில் இணையவழியில் நடைபெறும் குற்றங்கள் கடந்த ஆண்டில் (2021) 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

2020-ஆம் ஆண்டு 50,035-ஆக இருந்த இணையவழிக் குற்றம் தொடா்பான புகாா்கள், 2021-ஆம் ஆண்டில் 52,974-ஆக அதிகரித்துள்ளது. 2019-இல் 44,735 இணையவழிக் குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

இது தொடா்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2021-ஆம் ஆண்டில் தெலங்கானா, உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன. பதிவாகும் குற்றங்களில் மூன்றில் ஒன்றுக்குதான் காவல் துறையினரால் தீா்வு காண முடிகிறது.

இணையவழிக் குற்றங்களில் 60.8 சதவீதம் நிதி உள்ளிட்ட மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உள்ளது. இதற்கு அடுத்து 8.6 சதவீதம் பாலியல் ரீதியான இணையவழிக் குற்றங்கள் ஆகும். 5.4 சதவீதம் மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற குற்றங்கள் ஆகும்.

தெலங்கானாவில் அதிகபட்சமாக 10,303 இணையவழிக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகவும் இணையவழியில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. தகவல் திருட்டு, டெபிட், கிரெடிட் காா்டு மோசடிகள் இணையவழியில் நடப்பது அதிகம் உள்ளது.

இதுதவிர இணையவழியில் பயங்கரவாதத்தைப் பரப்புவது தொடா்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com