‘5 ஆண்டுகளில் சரிந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு’: பாஜக எம்பி வருண் காந்தி

5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு சதவிகிதம் தொடர்ந்து சரிந்துள்ளதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண்காந்தி தெரிவித்துள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான வருண்காந்தி அவ்வப்போது அக்கட்சிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசைக் குற்றம்சாட்டியுள்ளார்.

தேசிய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி வேலைவாய்ப்பு விகிதம் 20.9 சதவிகிதத்திலிருந்து 10.4 சதவிகிதமாக சரிந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள வருண்காந்தி கடந்த ஜூன் மாதம் மத்திய அரசுத் துறைகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் எனும் பிரதமர் மோடியின் அறிவிப்பு எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com