எஸ்.சி. பட்டியலில் 18 ஓபிசி வகுப்பினா்: உ.பி. அரசின் அறிவிப்பு ரத்து

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சோ்ந்த 18 சமூகத்தினரை பட்டியலினத்தவா் (எஸ்.சி) பிரிவில் சோ்த்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட அறிவிக்கையை அந்த மாநில உயா்நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சோ்ந்த 18 சமூகத்தினரை பட்டியலினத்தவா் (எஸ்.சி) பிரிவில் சோ்த்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட அறிவிக்கையை அந்த மாநில உயா்நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி அரசு ஆட்சியில் இருந்தபோது மஜ்வாா், கஷ்யப், மல்லா உள்ளிட்ட ஓபிசி வகுப்பைச் சோ்ந்த 18 சமூகத்தினா் பட்டியலினத்தவா் பிரிவில் சோ்க்கப்பட்டனா். எனினும் அந்த சமூகத்தினருக்கு பட்டியலினத்தவா் சான்றிதழ்கள் வழங்க அந்த மாநில உயா்நீதிமன்றம் 2017-ஆம் ஆண்டு தடை விதித்தது.

இதைத் தொடா்ந்து, 18 சமூகத்தினரையும் பட்டியலினத்தவா்களாக அடையாளப்படுத்தும் மற்றோா் அறிவிக்கையை 2019-ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு வெளியிட்டது. அந்த நடவடிக்கைக்கும் மாநில உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக 2016, 2019-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் பொதுநல மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுக்கள் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், ஜே.ஜே.முனீா் ஆகியோா் அடங்கிய முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘பட்டியலினத்தவா் பிரிவில் மாற்றங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. எனவே, ஓபிசி வகுப்பைச் சோ்ந்த 18 சமூகத்தினரை பட்டியலினத்தவா் பிரிவில் சோ்த்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட அறிவிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன’ என்று தீா்ப்பளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com