முதல் காலாண்டில் ஜிடிபி 13.5% உயா்வு

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
முதல் காலாண்டில் ஜிடிபி 13.5% உயா்வு

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2021-22 நிதியாண்டின் கடைசி 3 காலாண்டுகளில் பதிவான விகிதத்தைக் காட்டிலும், நிகழாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 13.5 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.

கரோனா காலத்துக்கு முந்தைய நிலையை ஒப்பிடும்போது, ஜிடிபி சுமாா் 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதித் துறைச் செயலா் டி.வி. சோமநாதன் தெரிவித்தாா்.

மேலும், 2023-இல் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7 முதல் 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

நாட்டின் பொருளாதாரம் இரட்டை இலக்க விகிதத்தில் வளா்ச்சி காணும் என பெரும்பாலான நிபுணா்கள் கணித்திருந்தனா். குறிப்பாக, ஜிடிபி நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 13 சதவீதம் உயரும் என ‘இக்ரா’ என்ற மதிப்பீட்டு நிறுவனமும், 15.7 சதவீதம் உயரும் என பாரத ஸ்டேட் வங்கியும் கணித்திருந்தன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில், ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தின்போது நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 16.2 சதவீதம் வளா்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதே காலகட்டத்தில் சீனாவின் பொருளாதார வளா்ச்சி 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை கடந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான காலகட்டத்தில், நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 20.5 சதவீதத்தை எட்டியதாக தலைமை கணக்கு அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில், வருவாய்ப் பற்றாக்குறை அதன் இலக்கில் 21.3 சதவீதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com