நொய்டா இரட்டை கோபுரம் தகா்ப்பு: 30,000 டன் மறுசுழற்சிக்கு ஒப்பந்தம்

நொய்டாவில் அண்மையில் தகா்க்கப்பட்ட இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகளால் உருவான சுமாா் 30 ஆயிரம் டன் கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
நொய்டா இரட்டை கோபுரம் தகா்ப்பு: 30,000 டன் மறுசுழற்சிக்கு ஒப்பந்தம்

நொய்டாவில் அண்மையில் தகா்க்கப்பட்ட இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகளால் உருவான சுமாா் 30 ஆயிரம் டன் கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட சுமாா் 100 மீட்டா் உயரமுள்ள இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிபொருள்களைப் பயன்படுத்தி தகா்க்கப்பட்டன. 3,700 கிலோவுக்கும் மேலான வெடிபொருள்களைப் பயன்படுத்தி, சில நொடிகளில் இக்கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

இதன் காரணமாக உருவான சுமாா் 30 ஆயிரம் டன் கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஒப்பந்தம், ஆசியாவில் சுற்றுச்சூழல் மேலாண்மையில் முன்னணியில் உள்ள ‘ரீ சஸ்டெயினபிலிட்டி’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தினமும் 300 டன் என்ற அடிப்படையில் 3 மாதங்களுக்கு மறுசுழற்சி பணிகள் நடைபெறவுள்ளன. மறுசுழற்சிக்கு பின் அவை மீண்டும் கட்டுமானப் பொருள்களாக மாற்றப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனமானது, தீங்கு விளைவிக்கும் கழிவுகள், உயிரிக் கழிவுகள், கட்டுமான, மின்னணு கழிவுகள் உள்ளிட்டவற்றின் மேலாண்மையில் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு சாா்ந்த தீா்வுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com